கார்வண்ணன்
வடக்கு மாகாணத்துக்கு தமிழ்ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது ஒரு காலத்தில் தமிழ்த் தரப்புகளின்முக்கியமான கோரிக்கையாக இருந்தது.
மாகாண சபைகள் உருவாக்கப்பட்டகாலத்தில் இருந்து, வடக்கிற்கு தொடர்ச்சியாக சிங்கள ஆளுநர்களே நியமிக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோர், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்குஏற்ப செயற்படத் தவறியதால், இந்தக் கோரிக்கை வலுப்பெற்றது.
குறிப்பாக ஜி.ஏ.சந்திரசிறி ஆளுநராக இருந்த போது மாகாண அரச நிர்வாகத்தில் அதீதமான தலையீடுகளை மேற்கொண்டு, அதற்குகுடைச்சலைக் கொடுத்து வந்தார்.
அதனால், நல்லாட்சி அரசாங்கம்உருவான போது, தமிழ் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
ஆயினும், நல்லாட்சி அரசின்இறுதிக்காலகட்டத்தில் தான், அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, சுரேன் ராகவன், ஆளுநராகநியமிக்கப்பட்டார்.
அவருக்குப் பின்னர்,பி.எஸ்.எம்.சாள்ஸும், தற்போது ஜீவன் தியாகராஜாவும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் செயற்பாடுகள், இதற்காகவாதமிழ் ஆளுநரை நியமிக்குமாறு கோரினோம் என்று தலையில் அடித்துக் கொள்ளும் நிலையை,தமிழ்க் கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளுநர்களாக பொறுப்பேற்றதமிழர்களின் செயற்பாடுகள், பெரும்பாலும் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாகஇருக்கவில்லை.
அவர்கள் மக்களின் சார்பில் முடிவுகளைஎடுப்பதை விட, அரசாங்கத்தின் சார்பில், முடிவுகளை எடுப்பவர்களாகவும்,அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாகவும் தான் இருந்தனர்.
அரசாங்கம் கூறுவதை, கூடுதல்விசுவாசத்துடன் செய்து முடிப்பவர்களாகத் தான் இருக்கின்றனர். ஆளுநர்களின் கடமைப்பொறுப்பு, மத்திய அரசாங்கத்தின், அதாவது ஜனாதிபதியின் உத்தரவுகளை நிறைவேற்றுவதுதான்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM