கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.

இதனால் இலங்கையில் கொவிட்-19 தொடர்பான இறப்பு எண்ணிக்கை 15,119 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 141 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியதாக உறுதிபடுத்தப்பட்டது.

அதனால் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட கொவிட்-19 இலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.