குடந்தையான்

கொரோனாத்தொற்று, ஒமிக்ரோனாகவும், ப்ளோரோனாவாகவும் உருமாற்றம் பெற்று மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் இந்த தருணத்தில் தி.மு.க. எதிர்க்கட்சியாக பணியாற்றியபோது உலக அளவில் கவனம் ஈர்த்த ‘Go Back Modi’ என்ற ஹாஸ்டாக் மீண்டும் அவசியமாகும் நிலைமையொன்று ஏற்பட்டிருக்கின்றது. 

தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக  பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி வருகை தரவுள்ளதால் மேற்படி ஹாஸ்டாக் மீண்டும் அவசியமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஆனால், தி.மு.க.இம்முறை ஆட்சியில் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமிழகத்திற்கு வருகை தரும் மோடியை அக்கட்சி வரவேற்பதற்கு தயாராகி விட்டது. தி.மு.க.வில் எப்படி இவ்விதமான நேர் எதிரான மாற்றம் நிகழ்ந்தது என்ற கேள்விகள் அதிகரித்திருக்கின்றன. அதற்கு அக்கட்சியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பதிலளித்துள்ளார். 

அவருடைய பதிலில், “மோடி மீளச் செல்ல வேண்டும்’ விடயத்தைப் பொறுத்தவரை கடந்தகால ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விற்கும், தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. இரண்டு கட்சிகளையும் ஒரே தராசில் ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அறிமுகப்படுத்தியபோது, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஆதரித்தது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/