சதீஷ்கிருஷ்ணபிள்ளை
கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்று கேட்பார், கண்ணதாசன். எதனால் எது நடந்தது என்ற காரண காரியங்களை அலசும் அபாரமான கேள்வி அது.
மத்திய ஆசிய பிராந்தியத்திலுள்ள கஸகஸ்தான் என்ற தேசத்தில் நிகழ்பவற்றைஆராய்கையில், இந்தக்கேள்வி மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.இங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.
அரச அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்புகிறார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்று அந்நாட்டின் ஜனாதிபதி முத்திரை குத்துகிறார்.
ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதா அல்லது ஆர்ப்பாட்டங்களை ஆட்சியாளர்கள் அடக்கிய முறைமையால் ஆட்சியாளர்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டதா என்பது தான் தற்போது மேலெழுந்துள்ள கேள்வி.
கடந்த மாதம் 2ஆம் திகதி கஸகஸ்தானின் மேற்குப் பகுதி நகரொன்றில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. இந்நாட்டில் பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் எரிபொருள் திரவ பெற்றோலிய எரிவாயுவான ஒட்டோ காஸையாகும். இதன் விலை சடுதியாக அதிகரித்ததை அடுத்துநூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவியது. முன்னர் தலைநகராக இருந்த அல்மாட்டி நகரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினார்கள். ஜனாதிபதி மாளிகையொன்றை தீக்கிரையாக்கினார்கள். பொலிஸ் வாகனங்கள் எரியூட்டப்பட்டன. அரசகட்டடங்கள் முற்றுகையிடப்பட்டன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM