மக்களின் நன்மதிப்பை வென்ற அருந்ததி  திருமண சேவை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'மாற்று மோதிரம்' மணப்பெண் அலங்கார கண்காட்சி நாளை திங்கட்கிழமை  மாலை 4.00 மணிக்கு கொழும்பு , சர்வதேச  பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அருந்ததி  திருமண சேவை நிறுவனத்தால் வருடாவருடம்  நடத்தப்படும் இந்த 'மாற்று மோதிரம்' மணப்பெண் அலங்கார கண்காட்சி  இம்முறையும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. 

இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் முன்னாள் முதற்பெண்மணியும்  தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாருமான சிராந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாக  கலந்தகொள்ளவுள்ளார். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என மேலும் பல சிறப்பு அதிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வு குறித்து அருந்ததி திருமண சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் மேகலா கருத்துத் தெரிவிக்கையில்,

எமது நிறுவனத்தால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 'மாற்று மோதிரம்' மணப்பெண் அலங்கார கண்காட்சி  இம்முறையும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அதன்படி நாளை திங்கட் கிழமைமாலை 4 மணிக்கு  சர்வதேச  பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்  மிஹின்லக்க மெதுர மண்டபத்தில் கண்காட்சி நடைபெறவுள்ளது.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் 'மாற்று மோதிரம்' மணப்பெண் அலங்கார கண்காட்சியில்  இம்முறை நாடு பூராகவும் இருந்து 50 க்கும் மேற்பட்ட அழகுக்கலை நிபுணர்கள்  கலந்துகொள்ளவுள்ளனர். 

தமிழ் ,சிங்களம் மற்றும் முஸ்லிம்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வு சுகாதார வழிகாட்டல்களுக்கு  அமைய நடைபெறவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார் .