மோடிக்கான ஆவணம் செவ்வாயன்று இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் கையளிப்பு

Published By: Digital Desk 4

09 Jan, 2022 | 07:34 PM
image

(ஆர்.ராம்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆவணம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் - பிரதமர் சந்திப்பு - Newsfirst

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரொலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என் சிறீகாந்தா ஆகியோரும் ரெலோ ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆவணம், டிசம்பர் மாதம் 29ஆம் திகதியிடப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கையொப்பமிட்டிருந்தார். அனைத்தொடர்ந்து ஏனைய தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் ; கட்சி...

2026-01-25 17:33:06
news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57