மட்டக்களப்பு,  வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்டபத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு வீடுகளை பொலிசார்  நேற்று சனிக்கிழமை (8) முற்றுகையிட்டு அங்கு இருந்த தாயும் மகளையும் கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.  

மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் வீடு தீக்கிரை - இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது  | Virakesari.lk

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை  குறித்த பகுதியிலுள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டபோது ஒரு வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

அத்துடன் அருகிலிருந்த  வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த பெண் ஒருவரை மதுபானத்துடன் கைது செய்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட இருவரும் தாயையும், மகளையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.