படகு மீது பாறை இடிந்து வீழ்ந்ததில் ஏழு பேர் பலி ; 32 பேர் காயம்

By Vishnu

09 Jan, 2022 | 11:23 AM
image

தென்கிழக்கு பிரேசிலில் அமைந்துள்ள ஏரியில் பயணித்த மோட்டார் படகு மீது பாறையொன்று எதிர்பாராத விதமாக இடிந்து வீழ்ந்துள்ளது.

Firefighters of Minas Gerais state search for victms after a wall of rock collapsed on top of motor boats below a waterfall in Capitolio, in Minas Gerais state, Brazil January 8, 2022. Fire Brigade of Minas Gerais/Handout via REUTERS

இதனால் குறித்த படகில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தின் கேபிடோலியோவில் அமைந்துள்ள ஏரியொன்றிலேயே சனிக்கிழமை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பாறை இடிந்து ஏரியில் வீழ்ந்ததையடுத்து பல படகுகள் நொறுக்கின மற்றும் பாரிய அலைகளும் ஏழுந்தன. இதனால் படகில் பயணித்த சுற்றுலா பயணிகள் பீதியில் கூச்சலிட்டனர்.

அனர்த்தம் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், மூவர் காணாமல் போயுள்ளனர், 32 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒன்பது பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிரேசிலின் தீயணைப்பு பிரிவினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right