கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் நேற்றைய தினம் க‍ைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கல்கிசை மற்றும் அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 பொருட்கள் திருடப்பட்டமை தெரியவந்ததுடன், கடைகளில் திருடப்பட்ட ஆறு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட பொருட்களும், சந்தேக நபரும் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 37 வயதுடைய இரத்மலானை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.