(நா.தனுஜா)
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருப்பாகக் காணப்பட்ட 382.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம், டிசம்பர் மாதத்தில் 175.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் முடிவில் வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமத 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் என்று ஏற்கனவே மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 29 ஆம் திகதி கையிருப்பின் பெறுமதி 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருப்பதாக ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருந்த பதிவின் ஊடாக உறுதிப்படுத்தியிருந்தார்.
பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட 10 பில்லியன் யுவான்களைச் (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) சேர்த்ததன் மூலம் இருப்பின் அளவு உயர்வடைந்திருக்கும் என்ற கருத்துருவாக்கம் காணப்பட்டபோதிலும், அப்போது மத்திய வங்கி அதுபற்றிய தெளிவுபடுத்தலை வழங்கியிருக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் காணப்பட்ட உத்தியோகபூர்வ இருப்பு தொடர்பான தரவுகள் தற்போது மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் வெளிநாட்டு நாணய இருப்பின் பெறுமதி 2770.6 மில்லியன் டொலர்களாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் பேணப்படும் இருப்பின் பெறுமதி 67.0 மில்லியன் டொலர்களாகவும் எஸ்.டி.ஆர் பெறுமதி 123.6 மில்லியன் டொலர்களாகவும் தங்கத்தின் பெறுமதி 175.4 மில்லியன் டொலர்களாகவும் ஏனைய இருப்புக்களின் பெறுமதி 1.1 மில்லியன் டொலர்களாகவும் அனையனைத்தையும் சேர்த்து மொத்த இருப்புக்களின் பெறுமதி 3,137.6 மில்லியன் டொலர்களாகவும் (3.1 பில்லியன் டொலர்) பதவாகியுள்ளன.
அதேவேளை கடந்த நவம்பர் மாதத்தில் வெளிநாட்டு நாணய இருப்பு 1014.7 மில்லியன் டொலர்களாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் பேணப்படும் இருப்பு 67.0 மில்லியன் டொலர்களாகவும் எஸ்.டி.ஆர் பெறுமதி 123.7 மில்லியன் டொலர்களாகவும் தங்கத்தின் பெறுமதி 382.2 மில்லியன் டொலர்களாகவும் ஏனைய இருப்புக்கள் 0.8 மில்லியன் டொலர்களாகவும் அமைந்துள்ளன. அதன்படி 2021 நவம்பர் மாதத்தில் காணப்பட்ட இருப்பின் பெறுமதி 1,588.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (1.5 பில்லியன் டொலர்) ஆகும்.
மேலும், நவம்பர் மாதம் 1.5 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி டிசம்பர்மாத இறுதியில் 3.1 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ள நிலையில், அதில் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 10 பில்லியன் யுவான் (சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) உள்ளடக்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM