மார்கழியில் மக்கள் இசை

Published By: Digital Desk 2

08 Jan, 2022 | 04:26 PM
image

மரபிசை, நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை, ராக் , பாப் என வெவ்வேறு வகையான இசைகளால் , பெருகியிருக்கிறது இவ்வுலகம். இசை பற்றி சிந்திப்பதற்கான ஒரு மாபெரும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது நீலம் பண்பாட்டு மையம். 

ஒவ்வொரு இசையும் வேறுப்பட்டது ஆனால் ஒவ்வோர் இசையும் இசைதான் .இசையென்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கின்ற ஒன்று மட்டும் அல்ல, மாறாக அது மானுட பண்பாட்டின் ஆழத்தில் இருப்பது. இசை தானாக நிகழ்வதில்லை. நாம் அதை உருவாக்குகிறோம். அதிலிருந்து நாம்  எதையோ அறிந்து கொள்ளவும் செய்கிறோம் .மக்கள் இசையின் வழியாக சிந்திக்கிறார்கள், தாங்கள் யார் என்பதை அதன் வாயிலாக அறிந்து கொள்கிறார்கள். 

இதன் மாபெரும் எழுச்சி மிக்க முன்னெடுப்பு தான் மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 )கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்கபட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. 

அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் கணேசன் , நாட்டுபுற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரும் , (25/12/2021)  திகதி பம்பை பறையிசை குழுவினர் , புத்தர் கலைக் குழுவினர் , கிராமிய புகழ் வி.எம்.மகாலிங்கம், மதிச்சயம் பாலா ,சுகந்தி ஆகியோரும்,  (26/12/2021) திகதியன்று ஐஐடியில்  ஒப்பாரி , ஜெயக்குமார் மற்றும் குழு ,தெருக்குரல் அறிவு. (27/12/2021) தேதியன்று ஜெய்பீம் கிளாட் இசைக்குழு , காரியப்பட்டி சேகர் கூட்டு நய்யாண்டி குழு , தலித் சுப்பையா , சித்தன் குணா , திருமூர்த்தி ஆகியோரும் , (28/12/2021)  திகதியன்று  கிருஷ்ண கானா சபாவில் பால முருகன் பெரிய மேளம்-திருவண்ணாமலை , கானா பாடகர்கள் ,முனியம்மா ஆகியோரும். (29/12/2021) , (30/12/2021)  ஆகிய  திகதியன்று  தமிழ்  இசை  சங்கத்தில் , முரசு கலைக்குழு , ஆந்தக்குடி இளையராஜா மற்றும் குழு , கிடாகுழி மாரியம்மா , எருதுகொட்டி பறையிசை – ஜிப்லா , மலைவாழ் மக்கள் பாடல்கள் , குரகா-மங்களூர், கங்காணி குமார், சம்பத், இருளர் கன்னியப்பன் முல்லைக்குழு ஆகியோரும் மற்றும் (31/12/2021) அன்று மார்கழியில்  மக்களிசையின்  கடைசி நிகழ்வாக   மியூசிக்  அகாடமியில் பாப்பம்பட்டி ஜம்மா, தி காஸ்ட்லஸ் கலெக்டிவ் கலைஞர்கள் பங்கு பற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக  திரைப்பட  இயக்குனர் பா.ரஞ்சித் , இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ் ,   எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா ஆகியோர்கள் பங்கு பற்றி நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும்  மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right