அம்பாறை, திருக்கோயில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருந்து சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபரொருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருக்கோயில், பாலக்குடா பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தே சுமார் 20 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த மதுபான போத்தல்களை  நேற்று (03) மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.