கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டில் மேலும் 16 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று மாலை உறுதிபடுத்தியுள்ளது.

இதனால் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15,099 ஆக அதிகரித்துள்ளது.

எட்டு ஆண்களும், எட்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.