அவசியமான ஒழுங்குபடுத்தல் அனுமதிகளை பெற்றுக்கொண்டதைத்தொடர்ந்து, 2016 ஒக்டோபர் 3ம் திகதி முதல்,  Fairfax குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் லிமிட்டெட், முன்னர் சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்த ஏசியன் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிட்டெட்டின் 100 பங்குகளை கொள்வனவு செய்துள்ளது. 

இதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில், யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் லிமிட்டெட்டின் அங்கத்துவ நிறுவனமாக இயங்கும்.

ஏசியன் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது, IASL – Fintelekt அறிமுக காப்புறுதித்துறை விருதுகள் 2016 இன் போது மோட்டார் காப்புறுதித்துறையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருந்தமைக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது.

Click2Claim எனும் நஷ்டஈடு வழங்கும் புத்தாக்கமான தொழில்நுட்ப ரீதியான தீர்வுக்காக விருதை வென்றிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், மருத்துவக்காப்புறுதித்துறையில் பதிவு செய்திருந்த வளர்ச்சிக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் விருதை வென்றிருந்தது. 

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, பொதுக்காப்புறுதித்துறையில் முன்னணியில் திகழக்கூடிய உள்ளம்சங்களைக் கொண்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் பொதுக் காப்புறுதித்தீர்வுகளை வழங்குவதில் Fairfax குழுமம் முன்னணியில் திகழ்கிறது.

டொரான்டோவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், டொரான்டோ பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 2015 இல், Fairfax சொத்துக்கள் பெறுமதி 43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. வருமானம் அண்ணளவாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. பொது பங்குதாரர்களின் உரிமையாண்மை 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இந்த கையகப்படுத்தல் தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜீவ் ஜா கருத்துத் தெரிவிக்கையில்,

“ஏசியன் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அணியை Fairfax குடும்பத்துக்கு வரவேற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஏசியன் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அணி சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. கையகப்படுத்தல் செயன்முறையின் போது Fairfax இன் பெறுமதிகளான “நேர்மை மற்றும் நட்புறவு” ஆகியன முக்கிய விடயங்களாக பின்பற்றப்பட்டிருந்தன. தற்போது பின்பற்றப்படுகின்றது” என்றார்.