நாடாளாவிய ரீதியில் இடைக்கிடையே மின்விநியோகம் துண்டிக்கப்படும் - இலங்கை மின்சார சபை

By Vishnu

07 Jan, 2022 | 06:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்காவிடின் நாடளாவிய ரீதியில் மாலை 6 மணிமுதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகிப்பதை கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இடை நிறுத்தியுள்ளதால் இலங்கை மின்சார சபை இத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளிலும்,நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலும் சுமார் 2 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்பட்டது.

களனிதிஸ்ஸ மின்நிலையம் இன்றைய தற்காலிகமான சபுகஸ்கந்த மின்நிலையத்திடமிருந்து மின் விநியோகத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மின்பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன், பிரதான மின்னுற்பத்தி நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேசிய மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

களனிதிஸ்ஸ மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி நேற்று காலை செயலிழந்துள்ளது. மின்பிறப்பாக்கியை சீர் செய்வதற்கு குறைந்தப்பட்சம் 2 நாட்களேனும் தேவைப்பகும்.

மின்விநியோக கட்டமைப்பிலும்,பிறப்பாக்கியிலும் காணப்படும் பிரச்சினை குறித்து மின்சார சபை முன்னாயத்த நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் இருப்பது தவறான செயற்பாடாகும்.

அவசர மின்கொள்வனவினாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் எதிர்வரும் நாட்களில் மின்துண்டிப்பு ஏற்படலாம் என இலங்கை மின்சார சபையின் தொழினுட்ப மற்றும் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் ஜே.எச்.நிஷாந்த தெரிவித்தார்.

எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக முன்னறிவித்தலின்றிய வகையில் எதிர்வரும் நாட்களில்  மின்விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை சேவை சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41