இலங்கையில் 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

முன்னதாக, 15-19 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் இதற்கு முன்பு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை சுமார் 30,000 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசி டோஸ் மட்டுமே செலுத்துவதற்கு சுகாதார அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இணையாக இதுவரை பூஸ்டர் தடுப்பூசி போடாத பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் குறித்த இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கல்விசாரா ஊழியர்களும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பணிகளில் ஈடுபடுபவர்களும் ஒரே நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசியை இன்று பெற முடியும்.

இதேவளை நாட்டின் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலைகளில் வழமையான நிலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.