இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் :   வழக்கு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

06 Jan, 2022 | 09:38 PM
image

( எம்.எப்.ம்.பஸீர்)

'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக  கைது செய்யப்பட்டு,  பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள  அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக புத்தளம் நீதிமன்றில் குற்ற பகிர்வுப்  பத்திரம் - திங்களன்று விசாரணைக்கு வருகிறது | Virakesari.lk

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசிங்க இதற்கான உத்தரவை இன்று (6) பிறப்பித்தார்.

வழக்கு விசாரணைகளுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளல் மற்றும்  சாட்சி விசாரணைகளுக்கான திகதியை குறிப்பதற்காக இவ்வாறு இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும்,  சாட்சி விசாரணை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்திருந்தது. இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில்  அரச சட்டவாதி ஒருவர் ஆஜரானதுடன், பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான  எம். நுஹ்மான் மற்றும்  ஹுஸ்னி ரஜித் ஆகியோர் ஆஜராகினர்.

 அத்துடன் சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி  5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த, இவ்வழக்கின் பிரதிவாதியான  அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜராகியிருந்தார்.

இந் நிலையிலேயே  வழக்கு பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்ப்ட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43