சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும்  திட்டத்தை இந்தியா ஆரம்பித்துள்ளது.

இதன்போது கலப்பு தடுப்பூசிகளை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புதிய சுகாதார வழிகாட்டல்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்றுக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இதற்கு ஒமிக்ரோன் தாக்கமே காரணம் என இந்திய சுகாதார தரப்புகள் குறிப்பிடுகின்றன.

எனவே மீண்டும் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டது.  ஒரு வாரத்திற்கு முன்பு 10 வீதத்திற்கு மேல் நேர்மறையாக இருந்த மாவட்டங்களின்  தொற்றாளர்களின் எண்ணிக்கை  திடீரென 28 ஆக அதிகரித்துள்ளது.  

எனவே ஓமிக்ரோன் வைரசினை கண்டறிய புதிய சோதனைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்கு மணி நேரத்தில் முடிவுகளைத் தருக்கூடியதாக சுகாதார தரப்புகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், வீட்டு தனிமைப்படுத்தல் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தனிமைப்படுத்தும் காலத்தை 10 முதல் ஏழு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் சிறு மற்றும் அறிகுறியற்ற நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஐந்து நாட்களாகக் குறைத்துள்ளது.  

எனவே ஓமிக்ரோன் ஒரு மென்மையான திரிபு என்றும், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நிலையில் சிறு அறிகுறிகளை வெளிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.