அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பு

Published By: Vishnu

06 Jan, 2022 | 05:04 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து பொதுநிர்வாக அமைச்சினால் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. 

இம்மாதம் முதலாம் திகதி முதல் இந்த சுற்று நிரூபம் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய ஓய்வூதிய சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளமையானது , அரசியலமைப்பில் அல்லது வேறு சட்டங்களின் ஊடாக ஓய்வு பெறுவதற்கான வயது ஸ்திரமாக்கப்பட்டுள்ளவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் பொதுவானதாகும். இந்த சுற்றுநிரூபம் இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56