மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்க முடியாத அரசாங்கம் ஆட்சிப் பீடத்தில் இருப்பதில் அவசியமில்லை - வடிவேல் சுரேஷ்

06 Jan, 2022 | 09:34 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தற்போதுள்ள அரசாங்கத்தால் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்ய முடியாதுள்ளது. மக்களின் அத்தியவசிய தேவைகளைக்கூட  வழங்க முடியாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சிப் பீடத்தில் இருப்பதில் அவசியமில்லை. இது ஒரு தரித்திரம் பிடித்த அரசாங்கம். 

ஆட்சி செய்ய முடியாவிட்டால், ஜனநாயக ரீதியாக ஆட்சியிலிருந்து விலகி வேறொருவருக்கு ஆட்சிப் பீடத்தை கொடுத்து விட்டு செல்ல வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.

மலையக சமூகத்துக்காக எனது குரல் எந்நேரமும் ஓங்கி ஒலிக்கும்.  எனது குரலை நசுக்க முடியாது. ராஜகிரியவிலுள்ள எமது தொழிலாளர் இல்லத்திலுள்ள எமது அலுவலக்தை குண்டர்கள் கூட்டம் சேதப்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத‍மை வெட்கமான விடயமாகும். 

மக்களின் வாக்குகள் தெரிவான மக்கள் பிரதிநிதியான எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது. எனக்கே பாதுகாப்பு பிரச்சினை காணப்படுது என்றால், சாதாரண மக்களுக்கு கிடைக்கக்கூடிய பாதுகாப்பு எப்படியானதாக இருக்கும் என அவர் கேள்வி எழுப்பினார்.

ராஜகிரியவிலுள்ள தொழிலாளர் இல்லத்தின் கேட்போர் கூடத்தில் 6 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை முன்வைத்தார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு பாடுபடுவது பெருந்தோட்ட மலையக மக்களாகும். அவர்களுக்கு எதுவித சம்பள அதிகரிப்போ வழங்கப்படவில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா சம்பள கொடுப்பனவு வழங்கிய அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் பெருந்தோட்ட மலையக மக்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கு மறந்துள்ளது. மலையக மக்கள் 'ரோபோக்கள்' அல்லர், அவர்களும் மனிதர்களே. 

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும். இவை இன்னும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதுதவிர மலையக பெருந்தோட்ட பகுதிகளில், பெரும்பான்மை இனத்தவர்களை குடியமர்த்தி, இல்லதா ஒரு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வந்துள்ளன. 

தெனியாயவிலும் மலையக மக்கள் இருக்கக்கூடிய இடங்களில் பெரும்பான்மை மக்கள் குடியமர்த்தப்பட்டு எமது மக்களின் காணி நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. நாம் எதையும் கெஞ்சி கேட்டுப் போக மாட்டோம். எமக்கான உரிமைகளை நாம் தட்டி கேட்போம். 

மலையக மக்கள் , இளைஞர் யுவதிகள் ஆயுதம் ஏந்தியதில்லை. நாம் ஒருபோதும் அவ்வாறு செய்ததுமில்லை. அவ்வாறு செய்யபோவதுமில்லை. மலையக தோட்டங்களில்  வெளியாட்களை குடியமர்த்துவதை தவிர்க்கப்பட வேண்டும். மலையகம் எமது தாய் நாடு. அதனை விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை. என்றார்.

மலையக தோட்ட நிர்வாகங்கள் யாருக்கும் ‍ தெரியாமல் இரவோடு இரவாக கைமாற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொழில்புரியும் எமது மக்கள் பாதிக்கப்படுவர். அவர்களுக்கான ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்டவற்றை பதில் கூற வேண்டியவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. 

இதற்கு தீர்வு எட்டப்படாது எவ்வாறு தோட்ட நிர்வாகங்களை  மாற்று முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33