அரசாங்க கட்டிடங்கள் மீதான தாக்குதல்களின்போது கசகஸ்தானில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஒரு டஜன் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒரு பொலிஸ் அதிகாரி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் ஒரே இரவில் கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் நடந்தன, மேலும் தாக்குதல் நடத்திய டஜன் கணக்கானவர்கள் பொலிஸாரினால் அடித்து கலைக்கப்பட்டனர்.
புதனன்று நகரத்தில் பரவலான அமைதியின்மைக்குப் பிறகு கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் அரங்கேறியுள்ளதுடன், நகர மேயரின் அலுவலக கட்டிடமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சால்டனாட் அசிர்பெக் அரச செய்தி நிறுவனமான கபார்-24 க்கு தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 12 பேரைத் தவிர மேலும் 353 சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கசகஸ்தான் சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு கண்டிராத மோசமான வன்முறை சம்பவம் இதுவாகும்.
இதனிடையே ரஷ்யா தலைமையிலான இராணுவக் கூட்டணி, ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவின் வேண்டுகோளின் பேரில் கசகஸ்தானுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்புவதாக வியாழன் அதிகாலை தெரிவித்தது.
கசகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலையை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM