முதல் முறையாக ரோஸ் நிறப்பந்தில் இலங்கை ‘ஏ’ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ‘ஏ’ அணிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட 3 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரோஸ் நிறத்திலான பந்து இத் தொடரில் முதல் தடவையாக பயன்படவுள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரு அணித் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
இதன் போது இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவிக்கையில்,
சிவப்பு நிறத்திற்கு பதிலாக ரோஸ் நிறத்திலான பந்துகளைப் பயன்படுத்துவதால் பெரியளவில் பாதிப்பு இல்லை. இரு பந்துகளுக்கும் பெரிதளவில் நிறவித்தியாமில்லையென நினைக்கின்றேன்.
இதேவேளை, போதியளவு பயிற்சி பெற்றுள்ளதால் சிறப்பாக செயற்படுவோம். அத்துடன் இவ்வாறான தொடர்களில் விளையாடுவதன் மூலம் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளதென தெரிவித்தார்.
இது தொடர்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் தெரிவிக்கையில்,
நாம் நல்ல பயிற்சிகளை பெற்றுள்ளோம். சிறப்பாக செயற்பட்டு வெற்றி பெறுவோம். ரோஸ் நித்திலான பந்தில் விளையாடுவதால் எமக்கு எவ்வித கஷ்டமுமில்லை. நாம் இதற்கு முன்னர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ரோஸ் நிற பந்தில் விளையாடிய அனுபவமுள்ளது. அதனால் அது எமக்கு பாரிய சிக்கலாக இருக்காதென தெரிவித்தார்.
இலங்கை தேசிய அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன இலங்கை ஏ அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை தேசிய அணியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட லஹிரு திரிமான்னேயும் இவ் அணியில் இடம்பிடித்துள்ளார். இதை விட தேசிய அணியில் களமிறங்கிய இன்னும் சில வீரர்களும் களமிறங்குவதால் இலங்கை ஏ அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு அணிகளக்குமிடையிலான முதல் போட்டி இன்றைய தினம் ஆர்.பிரேமதாசா மைதானத்திலும் 2 ஆவது போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி தம்புள்ளையிலும் 3 ஆவது போட்டி 18 ஆம் திகதியும் அதன்பின்னர் 3 மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவிஷ்கா குணவர்த்தனாவும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸும் செயற்படவுள்ளனர்.
இலங்கை ஏ அணிவிபரம்.
திமுத் கருணாரத்ன (அணித் தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் ஜனித் பெரேரா (உதவி அணித் தலைவர்), ரோஷன் சில்வா, சரித் அசலங்க, நிரோஷான் டிக்வெல்ல, அசேல குணரத்ன, அவிஷ்கா பெர்னாண்டோ, அனுக் பெர்னாண்டோ, விமுக்தி பெரேரா, பிரபாத் ஜயசூரிய, லக்ஸன் சண்டகன், அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார இகசுன் மதுஷங்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM