உலகெங்கிலும் உள்ள நாடுகளின் நகர்ப்புறங்களில் காற்று மாசுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டில் 1.8 மில்லியனுக்கும் அதிகபடியான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக புதிய ஆராய்ச்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ளிட்டே 'தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் ஜர்னல்' இதழில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 86 சதவீத அதாவது கிட்டத்தட்ட 2.5 பில்லியன் மக்கள் ஆரோக்கியமற்ற காற்றின் துகள்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் விளைவாக 2019 ஆம் ஆண்டில் உலகளவிய நகர பகுதிகளில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் 2019 ஆம் ஆண்டில் நைட்ரஜன் டை ஆக்சைட் (NO2) மாசுபாடு உலகளவில் கிட்டத்தட்ட 2 மில்லியன் குழந்தைகள்/ சிறுவர்களிடையே ஆஸ்துமா நோயினை தோற்றுவிக்கின்றது.
அதே இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆயிவின் தகவல்கள் மூன்றில் இரண்டு நோயாளர்கள் நகர்ப்புறங்களில் பதிவாகுவதாக வெளிக்காட்டியுள்ளது.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் மூத்த தலைமுறையினரிடையே தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்குமான உத்திகளின் அவசியத்தை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM