எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் டின்களிலும் பாதுகாப்பு முத்திரை/ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் பல கட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.

ஜனவரி 3 ஆம் திகதி முதல் நாட்டில் உரிமம் பெற்ற மதுபான ஆலைகள் மதுபான போத்தல்கள் மற்றும் டின்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய முத்திரைகள் ஒட்டப்பட்ட மதுபான போத்தல்கள் சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் , பழைய மதுபான போத்தல்களை விற்பனை செய்து நிறைவு செய்வதற்கு ஏப்ரல் முதலாம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.