ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பாக்தாதியின் உணவில் விஷம் வைத்து கொலை செய்வதற்கான சதிச்செயலொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபுபக்கல் அல் பாக்தாதியின் பகல் உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இரகசிய இடமொன்றில் வைத்து  வைத்திய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விஷமூட்டப்பட்ட உணவு ஐ.எஸ். அமைப்பின் முக்கிய மூன்று படைத்தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும், அவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  உணவில் விஷம் கலந்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.