நுவரெலியா இராகலை - மந்தாரம்நுவர பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Published By: Digital Desk 4

06 Jan, 2022 | 01:04 PM
image

(க.கிஷாந்தன்)

நுவரெலியா இராகலை - மந்தாரம்நுவர பிரதான வீதியின் கோணகல, கல்கந்த பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளமையால் அந்த வீதியூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 1.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைக் காரணமாக இவ்வாறு வீதியில் கற்பாறைகள் சரிந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வீதியில் கிடக்கும் கற்களை அகற்ற நேற்று பிற்பகல் 11 மணிவரை பிரதேச சபை அதிகாரிகளோ, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோ வரவில்லை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அன்றாட கடமைகளுக்காக நுவரெலியா நகருக்கு செல்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். நிலைமையை கருத்தில் கொண்டு பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து கற்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான அபாய நிலைமை தொடர்பில் ஆராய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் குறித்த பகுதிக்கு வரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கௌரவ” என்று விளிப்பதா? இல்லையா? -...

2026-05-20 15:45:32
news-image

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின்...

2026-05-20 15:44:36
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான்...

2026-05-20 15:38:05
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06