2022 இல் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளக்கூடிய உலகில் 22 சிறந்த இடங்களில் கொழும்பும்

By Vishnu

06 Jan, 2022 | 08:31 AM
image

2022 ஆம் ஆண்டில் உலகில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளக்கூடிய சிறந்த 22 இடங்களில் இலங்கையின் கொழும்பு நகரமும் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா பயணிகள் தொடர்பான CNN TRAVEL என்ற இணையத்தளம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் உள்ள சிறப்பான விடயங்களின் அடிப்படையில் 22 இடங்களை இலங்கையின் கொழும்பு நகரமும் உள்வாங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தவிர இந்த பட்டியலில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பிசாகோஸ் தீவுகள், கேப் பிரெட்டன், சீலி, டிஜான், டிஸ்கோ பே, காபன் தேசிய பூங்காக்கள், ஜோர்தான், லத்தி, முங்கா-திரி-சிம்ப்சன் பாலைவனம், நேபிள்ஸ், ஒல்லந்தாய்தம்போ, ஓர்க்னி தீவுகள், ஒஸ்லோ, பலாவ், பினாங், தென்னாபிரிக்கா, செயின்ட் யூஸ்டேடியஸ், துல்சா, வலென்சியா மற்றும் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா ஆகிய நகரம்/ நாடுகளும் இடம்பெற்றுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right