நியூ­ஸி­லாந்து அணிக்­கெ­தி­ரான சர்­வ­தேச ஒருநாள் போட்­டிக்­கான இலங்கை குழாமில் நுவன் குல­சே­க­ர­வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது நியூ­ஸி­லாந்து கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்­கேற்­றுள்­ளது.

இலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான தம்­மிக்க பிரசாத் இத்­தொ­டரில் இடம்­பெற்­றி­ருந்தார். பயிற்சி போட்­டி­க­ளின்­போது முதுகுப் பகு­தியில் ஏற்­பட்ட காயத்­தினால், அவர் தொட­ரி­லி­ருந்து வில­கினார். அவ­ருக்குப் பதி­லாக புது­முக வீரர் விஷ்வ பெர்­னாண்டோ அணியில் இணைக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஆனால், சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளுக்கு அனு­ப­வ­மிக்க பந்­து­வீச்­சா­ள­ரொ­ருவர் தேவை என்­பதால் நுவன் குல­சே­க­ரவை இலங்கை அணி தெரிவு செய்­தது. நுவன் குல­சே­கர இது­வரை 168 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் விளை­யாடி 182 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார்.

இதே­வேளை, இலங்கை அணியின் அதி­ரடித் துடுப்­பாட்ட வீர­ரான குஷல் பெரேரா­வுக்கு பதி­லாக டெஸ்ட் தொட ரில் கித்­ருவன் விதானகே இணைக்கப்பட் டதுடன், ஒரு நாள் தொடருக்கும் அவரை இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.