(எம்.மனோசித்ரா)
நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஒமிக்ரோன் பிறழ்வு பரவும் வேகம் அதிகரிக்கக் கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த இரு வாரங்களாக நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 300 ஆகவே காணப்பட்டது. எனினும் நேற்று முதல் இந்த எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும்.
தற்போது ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டில் காணப்படுகிறது. அதன் பரவல் வேகமும் அதிகரிக்கக் கூடும். அவ்வாறு ஒமிக்ரோன் பரவும் வேகம் அதிகரித்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போன்று இலங்கையிலும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
எனவே ஒமிக்ரோன் பிறழ்வு பரவுவதையும் , அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்வதற்கு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு, மூன்றாம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM