நானே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன் - கம்மன்பில

By Vishnu

05 Jan, 2022 | 07:54 PM
image

(ஆர்.யசி)

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிபொருள் கடன் என்பவற்றிற்கான பேச்சுவார்த்தையை நானே முன்னெடுத்தேன். மாறாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியாவுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் மூலமாக எரிபொருளுக்கான கடன் மற்றும் திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலை அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து வலுசக்தி அமைச்சரின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே இவற்றை கூறினார். 

அவர் மேலும் கூறியதானது,

இந்தியாவுடன் நிதி அமைச்சர் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் மூலமாகவே எமக்கு எரிபொருள் நிவாரண கடன் மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் அபிவிருத்தி குறித்து பேசப்பட்டதாக கூறுவது பொய்யான பிரசாரமாகும். 

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கும், 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ளவும், 400 மில்லியன் கைமாற்றல் கடனாக பெற்றுக்கொள்ளவும், நான்காவதாக எரிபொருள் களஞ்சிய நிலைய அபிவிருத்தி குறித்து பேசுவதாக கூறப்படுகின்றது. 

ஆனால் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பேச்சுவார்த்தையின் போது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தை மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. அதாவது உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கான கடன் சலுகையையே அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் எமது நாட்டில்  எரிபொருள் தேவைக்காக கடன் தருமாறு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதியே இந்திய உயர் ஸ்தானிகருக்கு கடிதம் மூலம் அறிவித்தேன். 

அதேபோல் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலைய அபிவிருத்தி குறித்த பேச்சுவார்த்தையை 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. 

ஆகவே இந்த இரண்டு செயற்பாடுகளையும் நானே முன்னெடுத்தேன். அதேபோல் 400 மில்லியனுக்கான கைமாற்று கடன் பெறுவது குறித்த பேச்சுவார்த்தையை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்றாலே ஆரம்பித்தார். எனினும் நிதியமைச்சர் இந்தியாவில் இவற்றை பேசியதால் நான்கு காரணிகளையும் அவர் முன்னெடுத்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வது குறித்து நிதி அமைச்சர் என்னிடம் எப்போதும் பேசியதில்லை. திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு முழுமையாக எனக்கே வழங்கப்பட்டுள்ளது. அதற்கமையவே இந்தியாவுடன் நான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதே அடுத்த...

2022-10-04 17:27:00
news-image

நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் :...

2022-10-04 16:12:22
news-image

அர்ஜுன மகேந்திரனுடன் பகலுணவை உட்கொள்ளவில்லை :...

2022-10-04 17:28:36
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15...

2022-10-04 16:55:46
news-image

சட்டவிரோத இழுவை வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடி...

2022-10-04 21:21:17
news-image

எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது -...

2022-10-04 16:24:19
news-image

ஜனாதிபதியிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடபகுதி கடற்தொழிலாளர்...

2022-10-04 21:12:59
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்க...

2022-10-04 16:04:04
news-image

தலைமைப் பதவி : முட்டாள் யார்...

2022-10-04 21:11:35
news-image

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து நிதி...

2022-10-04 15:50:33
news-image

வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி...

2022-10-04 19:45:06
news-image

தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி...

2022-10-04 17:32:09