தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பானுக ராஜபக்ஷ, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். 

தனிப்பட்ட காரணங்களுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக பானுக ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அறிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு பானு ராஜபக்ஷ கையளித்துள்ள ஓய்வு தொடர்பான கடிதத்தில்,

ஒரு விளையாட்டு வீரராகவும், கணவராகவும் இந்த முடிவை எடுத்தேன். குடும்பத்தின் பொறுப்புகளை நிறைவேற்றும் நம்பிக்கையில் நான் இந்த முடிவை எடுத்தேன். இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பானுகா ராஜபக்ஷ இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 5 ஒருநாள் மற்றும் 18 டி-20 போட்டிகளில் விளையாடி முறையே 89 மற்றும் 320 ஓட்டங்களை எடுத்துள்ளார். 

இறுதியாக லங்கா பிரீமியர் லீக் போட்டியில் காலி கிளடியோட்டர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி, இரண்டாம் இடத்துக்கு அணியை கொண்டு சேர்த்தார்.