நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வரலாற்று சாதனை

Published By: Vishnu

05 Jan, 2022 | 10:06 AM
image

மவுண்ட் மவுங்கானுய் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் புதன்கிழமை உலக சம்பியனான நியூஸிலாந்தை பங்களாதேஷ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Image

வரலாற்று வெற்றியினை பதிவுசெய்வதற்கு சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 40 ஓட்டங்ககேள தேவை என்ற நிலை இருந்தது.

அந்த இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 16.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் பெற்றி வெற்றியை பதிவுசெய்தது.

நியூசிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் மவுன்ட் மவுன்கானுவில் முதலாம் திகதி ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பங்களாதேஷ் 458 ஓட்டங்களை குவித்து. 

இதனால் 130 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸுக்காக விளையாடிய நியூசிலாந்து அணி 169 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் 40 ஓட்டங்கள் எடுத்தால் வென்றி என்ற எளிய இலக்குடன் 2 ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய பங்களாதேண் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

Image

இந்த ஆட்டத்தில் பங்களாதேஷ் படைத்த சாதனைகள்

  • நியூசிலாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் வெற்றி (அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும்)
  • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றி (16 ஆவது முயற்சி)
  • ஐ.சி.சி. தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றி
  • 61 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 6 ஆவது வெற்றி
  • சொந்த மண்ணில் நியூஸிலாந்தின் எட்டு தொடர் வெற்றி ஓட்டம் நிறைவுக்கு வந்தது (2017-தற்போது வரை)
  • சொந்த மண்ணில் தோற்கடிக்கப்படாத நியூசிலாந்தின் 17 வெற்றிகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09