இலங்கைக்கான சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ரத்நாயக்க தற்போது உயர் செயல்திறன் மையத்தில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.

இதற்கிடையில், சிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ருவின் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பீரிஸ் உயர் செயல்திறன் மையத்தில் ‘துடுப்பாட்ட பயிற்சியாளராக’ இணைக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனமும் இடைக்கால ஏற்பாடாகும்.

இதேவேளை தேசிய அணிகளின் ஆலோசக பயிற்சியாளரான மஹேல ஜெயவர்தன, ஐ.சி.சி. இளையோர் ஆடவர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க ஏற்கனவே கரீபியனில் இருக்கும் இளையோர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வதற்காக எதிர்வரும் ஜனவரி 9 அன்று மேற்கிந்தியத்தீவுகளுக்கு செல்லவுள்ளார்.

உலக கிண்ண காலக்கட்டத்தில் அவர் இலங்கை இளையோர் அணியுடன் இருப்பார்.