ஒமிக்ரோன் மாறுபாடு உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகின்ற நிலையில், கொவிட்-19 இன் புதிய மாறுபாடு அண்மையில் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது.

IHU என பெயரிடப்பட்ட B.1.640.2 மாறுபாடு IHU மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய மாறுபாடு 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் வேகம் ஒமிக்ரோனை விடவும் அதிகம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புதிய மாறுபாட்டுன் தொடர்புடைய குறைந்தது 12 தொற்றாளர்கள் பிரான்ஸ் நகர் மார்செய்ல்ஸ் அருகே பதிவாகியுள்ளனர்.