சிறந்த உணவு உற்பத்தி நிறுவனத்துக்கான விருதினை பெற்றுள்ள Abitha Products தனியார் நிறுவனம்

By T. Saranya

04 Jan, 2022 | 04:33 PM
image

BWIO USA  ஏற்பாடு செய்த சர்வதேச விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. வர்த்தக துறையில் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து நுகர்வோருக்கு சிறந்த சேவையாற்றிய நிறுவனங்களை  கெளரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் Abitha Products தனியார் நிறுவனமும் விருதினைப் பெற்றுக்கொண்டது.

முன்னால் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மற்றும்  கெளரவ சமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த விருது விழாவில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த உணவு உற்பத்தி நிறுவனமாக  Abitha Products தனியார் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Abitha Products தனியார் நிறுவனத்துக்கான விருதினை நிறுவனத்தின்   தலைவரான பெருமாள் ரா‍ஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.   விருதினை  பெற்றுக்கொண்ட அவர் அது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,  

அயராத முயட்சியும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக எமது நிறுவனம் வழங்கி வந்த தரமான சேவையும் உற்பத்தியுமே எம்மை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. 

இந்த விருதும் கெளரவமும் எமக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்துள்ளது. எமது இந்த வெற்றிக்கும்  நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்த நிறுவனத்தின் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right