(எம்.ஆர்.எம்.வசீம்)
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்திருக்கும் நிவாரண பொதியினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒரு பகுதியினருக்கு நிவாரணம் கிடைத்தாலும் நாடு எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.
அத்துடன் இந்த நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எவ்வாறு நிதி பெற்றுக்கொள்வது என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பதன் மூலம் பணம் அச்சிட்டு பகிர்ந்தளிக்க முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிதி அமைச்சர் எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று பாரிய பிரச்சினையாக இருப்பது டொலர் இல்லாமையாகும். மக்களுக்கு நிவாரணம் வழங்குவது இந்த பிரச்சினைக்கு தீர்வு அல்ல.
டொலர் பிரச்சினைக்கு தீர்வொன்றையே நாட்டுக்கு தேவையாக இருக்கின்றது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாலே பொருட்களின் விலை அதிகரித்து செல்கின்றது.
அதேபோன்று ஜனாதிபதி உர பிரச்சினையை ஏற்படுத்தியதால் நாட்டுக்குள் உணவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டதல்ல. அரசாங்கம் ஏற்படுத்திய பிரச்சினைகள்.
அத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தி பிரச்சினையால் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே தற்போது நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை தீரப்போவதில்லை. இந்த நிவாரணங்களை வழங்குவதற்கு புதிதாக வரி அதிகரிப்பதில்லை என நிதி அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
அதேபோன்று அரசாங்கத்துக்கு நிதி தேவைப்படும்போது பெற்றுக்கொள்வதற்கு குறை நிரப்பு பிரேரணை கொண்டுவரப்போவதில்லை என நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்திருந்தார்.
அப்படியாயின் அரசாங்கம் தெரிவித்திருக்கும் இந்த நிவாரணங்களை வழங்குவதற்கு பணம் எங்கிருந்து கிடைக்கின்றது? இதற்காக வேறு ஒதுக்கீடுகளில் இருந்து குறைப்பு செய்கின்றதா? அல்லது பணம் அச்சிட்டு விநியோகிப்பதா என்ற அரசாங்கத்தின் திட்டம் என்ன என கேட்கின்றோம்.
பணம் அச்சிட்டு நிவாரணம் வழங்கினால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். அப்போது மீண்டும் சம்பளம் அதிகரிக்கவேண்டி ஏற்படுகின்றது. இதனால் நாட்டில் பாரிய பணவீக்கம் ஏற்படுகின்றது. அதன் ஆரம்ப கட்டமே தற்போது இடம்பெறுகின்றது.
மேலும் அரசாங்கம் அறிவித்திருக்கும் நிவாரணம் ஒரு பிரிவினருக்கே வழங்க இருக்கின்றது. அப்படியாயின் நாட்டின் ஏனைய மக்களுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன?.
அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் நாட்டின் பணவீக்கம் 12.1 வீதத்தினாலும் உணவு பற்றாக்குறை நூற்றுக்கு 22 வீதத்தினாலும் அதிகரித்திருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் அழிவொன்றின் ஆரம்பமாகும். அத்துடன் பிரச்சினையை வேறு பக்கத்துக்கு தள்ளும் நிலையே இருக்கின்றது என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM