வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் தசூன் சானக்க அண்மையில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒரு டுவிட்டர் பதிவில் இதனை உறுதிபடுத்திய அவர், இன்னும் இரண்டு நாட்களில் எதிர்வரும் போட்டிகளுக்கான செயல்பாடுகளைத் தொடர தகுதியுடையவனாக இருப்பேன் என்று கூறினார்.

Image

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

நான் கோவிட்- 19 இலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் இரண்டு நாட்களில் அன்றாட வாழ்க்கையைத் தொடரவும் பயிற்சியைத் தொடங்கவும் எதிபார்த்துள்ளேன். 

உங்கள் அன்பான செய்திகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அனைவருக்கும் நன்றி. 

தயவு செய்து முகக் கவசம் அணிந்து, கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.