நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் 'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.
'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' ஆகிய படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வெங்கி இயக்கத்தில் தயாராகி வரும், ' 'வாத்தி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேரள தேசத்து தேவதை நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ் , தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. இதற்கான தொடக்க விழா நேற்று ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “இந்தியாவில் கல்வி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும், கல்வி தனியார் வசம் போனால் எம்மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதை மையப்படுத்தி வாத்தி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமில்லரமல் இந்தியா முழுவதும் பார்வையாளர்களுடன் நெருக்கமாக இப்படத்தின் கதை அமைந்திருப்பதால் பெரியளவில் கவனம் ஈர்க்கும்.” என்றார்.
இதனிடையே தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டில் 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்', 'கலாட்டா கல்யாணம்' என மூன்று படங்கள் வெளியாகின என்பதும், இவற்றில் 'ஜகமே தந்திரம்', 'கலாட்டா கல்யாணம்' ஆகிய இரண்டு படங்களும் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகியது என்பதும், தற்போது தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மாறன்' படமும் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM