நெருப்பைக் கிளறும் அரசியல்வாதிகள்

By Digital Desk 2

04 Jan, 2022 | 01:05 PM
image

கபில்

“முஸ்லிம்கள் மத்தியில்தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிராகவும்,முன்வைக்கப்படும் கருத்துக்கள், இலகுவில் தீயாகப் பரவக் கூடியவை. அவை காலம் காலமாகஇணைந்து வாழ்ந்த சமூகங்களை மேலும் பிளவுபடுத்தி விடக் கூடியது”

தமிழ் பேசும் மக்களின் மக்களின்அபிலாஷைகளை ஒன்றாக வெளிப்படுத்தும் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய ஒற்றுமைகளுக்குச் சவால் விடும் காரியங்களும்நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

13ஆவது திருத்தச்சட்டத்தைமுழுமையாக நடைமுறைப்படுத்துமாறு, இலங்கை அரசிடம் அழுத்தம் கொடுக்குமாறு, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியிடம்  கோருகின்ற, ஒரு முயற்சிரெலோவினால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ், மலையகத் தமிழ், மற்றும்முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலந்துரையாடல்கள், ஒட்டுமொத்ததமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தும், ஒரு ஆவணத்தை தயாரிக்கும்அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றன.

இந்த ஆவணத்தில் ஒப்பமிடுவதற்கானஇறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுடன்காலம் காலமாக இணைந்து வாழும் சமூகமாக முஸ்லிம்கள் இருந்து வந்தாலும், கடந்த சிலதசாப்தங்களில், இரண்டு சமூகங்களுக்கும் இடையில் விரிசல்கள்தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த முரண்பாடுகள் நீயா நானா என்றஅளவுக்குச் சென்றிருப்பதும், அதனை தீர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோது, நீறுபூத்த நெருப்பாக இருப்பதும், அவ்வப்போது சிலர் அதனை ஊதிப் பெருப்பித்துவருவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-02#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right