(செய்திப்பிரிவு)
சீன - இலங்கை நட்புறவில் 'ஒரு மண்டலம் ஒரு பாதை' வேலைத்திட்டம் முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அடிப்படை வசதி கட்டுமானத்தை தொடர்ந்தும் அபிவிருத்தி செய்து, பொருளாதார வளர்ச்சி நிலையை மேம்படுத்த இலங்கை பாடுபடும்.
இந்த முயற்சியின் மூலம் எதிர்காலத்தில் இலங்கையானது இந்தியப் பொருங்கடல் பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக மாறும் என்று எதிர்பார்ப்பதாக சீன தெற்காசிய கல்வியியல் சங்கத்தின் தெற்காசிய மொழிப் பிரிவுத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனாவும் இலங்கையும் கை கோர்த்து கொவிட்-19 தொற்று நோய் தடுப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும் என்று சீன - இலங்கை நட்புறவு மீது எதிர்பார்ப்பு கொண்டவர்கள் அனைவரும் நம்பிக்கை கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'அரிசி - இறப்பர் ஒப்பந்தம்' கையெழுத்திட்ட 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
சீனா- இலங்கை நட்புறவுக்கு நீண்டகால வரலாறு உண்டு. கடல்வழி பட்டுப் பாதையானது, இரு நாடுகளிடையே பண்பாடு, மதம், பொருளாதாரம், வர்த்தகம், தூதாண்மை ஆகிய துறைகளில் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பரிமாற்றங்களை மெய்ப்பித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, 5 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்காலத்தில், சீனாவில் வாழ்ந்த பௌத்தத் துறவி ஃபாகியான் இலங்கையில் பயணம் செய்து 2 ஆண்டுகளாக தங்கியிருந்தார்.
நாடு திரும்பிய பிறகு 'போகோவ்ஜூ' எனும் பயணப்பதிவுகளைத் தொகுத்து எழுதினார். இதில் இலங்கை பற்றிய மதிப்புள்ள வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.
அதே போல, 5 ஆம் நூற்றாண்டில், இலங்கையில் இருந்த பிக்குணி திசாரா சீனாவிற்கு பிக்குணிகளின் துறவ நெறிகளைக் கொண்டு சென்றார்.
7ஆம் நூற்றாண்டு, சீனாவின் பௌத்த துறவி சுவான்சாங் எழுதிய 'டா டாங் சி யு ஜீ| எனும் புத்தகத்தில் சிங்கள நாடு பற்றிய கதை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
மிங் வம்சத்தின் போது, சீனக்கடலோடி செங்ஹே இலங்கைக்கு வருகை தந்தார். அப்பயணத்தில் 'மும்மொழிக் கல்வெட்டு' பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு, தற்போது கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது, இரு நாட்டு நட்புறவு வரலாற்றை வெளிக்காட்டிய தொல்பொருள் ஆகும்.
தற்காலத்தில் சீன - இலங்கை நட்புறவு இடைவிடாமல் வளர்ந்து வருகிறது. 1957 ஆம் ஆண்டு இரு நாட்டுத் தூதாண்மை உறவு தொடங்கப்பட்டது.
தற்போது வரை, 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. நாடுகளிடையேயான நட்பார்ந்த சகவாழ்வு குறித்த சிறந்த மாதிரி என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தி இரு நாட்டுறவைத் தொகுக்கலாம்.
அமைதியான சகவாழ்வு மற்றும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில், ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறும் விதமான ஒத்துழைப்புகளை இரு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
தற்கால சீன - இலங்கை உறவின் முக்கிய வரலாற்று நிகழ்வை மீளாய்வு செய்தால், அரிசி - இறப்பர் ஒப்பந்தம் இரு தரப்புறவில் ஒரு முக்கிய மைல் கல்லாகும் என்று கருதப்படுகிறது.
1950 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு இலங்கை அரசு சீன மக்கள் குடியரசின் தகுநிலையை ஏற்றுக்கொண்டது.
1952 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலைமையில், மேற்கத்திய நாடுகள் சீனா மீது வர்த்தக தடை மேற்கொண்டன. இச்சூழலில் சீன மற்றும் இலங்கை அரசுகளிடையே இறப்பர் மற்றும் அரிசி பற்றிய 5 ஆண்டுக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போதைய சர்வதேச சூழலில் சர்வதேச தடையை தாண்டி, இலங்கை தரப்பு இத்தகைய முடிவினை எடுத்தது. அது மிகவும் எளிதல்ல. 2022 ஆம் ஆண்டுடன் இதற்கு 70 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.
அரிசி - இறப்பர் ஒப்பந்தம், வணிக மற்றும் வர்த்தகம் ரீதியிலான ஒப்பந்தம் மட்டுமல்லாமல், இரு தரப்பு நட்புறவை முன்னெடுத்து செல்லும் முக்கிய ஆவணமும் ஆகும். சீனாவை பொறுத்த வரை, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய வர்த்தக தடைகளைத் முறியடித்தது.
இலங்கையை பொறுத்த வரை, இந்த ஒப்பந்தத்தின் மூலம், சர்வதேச சந்தையில் அரிசி விலை உயர்வு மற்றும் இறப்பர் விலை சரிவு ஆகியவற்றால் ஏற்பட்ட சிக்கல் நிலை தணிந்தது. இரு நாடுகள் ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெற்று நட்புறவை அடைவதில் முன்மாதிரியான வரலாற்று நிகழ்வாக இது திகழ்கிறது. இது, இரு நாடுகளின் தூதரக உறவை தொடங்கி வைப்பதற்கான அடிப்படையை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 70 ஆண்டுகளில், அரிசி - இறப்பர் ஒப்பந்தத்தை தொடக்கப் புள்ளியாக கொண்டு, சீனாவும் இலங்கையும் நட்புறவு வளர்ச்சியின் பல முக்கிய நிகழ்வுகளை அனுபவித்துள்ளன.
1957 ஆம் ஆண்டு, அப்போதைய சீனத் தலைமை அமைச்சர் சோ என்லேய் இலங்கையில் பயணம் மேற்கொண்டு, மழைப் பொழிவில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து இரு நாடுகள் அதிகாரப்பூர்வமாக தூதாண்மை உறவை தொடங்கி வைத்தன. பின்னர், வெளியுறவு அமைச்சகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை இலங்கையில் சிங்காள மொழியைக் கற்றுக் கொள்ள அனுப்பினார்.
சிராணி பண்டாரநாயக்க தனது பதவிக்காலத்தில் பலமுறை சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு, சீன அரசுத் தலைவர் மா சேதுங், தலைமை அமைச்சர் சோ என்லாய் ஆகியோருடன் நட்புறவை மேற்கொண்டார்.
1972 ஆம் ஆண்டு, சிராணி பண்டாரநாயக்க சீன மக்களுக்கு நன்கொடையாக வழங்கிய யானை குட்டி ஒன்று, சீன - இலங்கை நட்புறவின் இனிய அடையாளச் சின்னமாகும். சீனாவின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் இலங்கையின் முக்கிய கட்டிடச் சின்னமாகும்.
2014 ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அப்போது ஜனாதிபதியாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொழும்பு துறைமுக நகருக்கு அடிக்கல் நாட்டி அதனை தொடங்கி வைத்தார். இன்று கொழும்பு துறைமுக நகர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகவும் அழகிய நகராக காட்சியளிக்கிறது.
சீன - இலங்கை நட்புறவில் 'ஒரு மண்டலம் ஒரு பாதை' எனும் வேலைத்திட்டம் முக்கிய பங்கினை வருகிறது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், அடிப்படை வசதி கட்டுமானத்தை தொடர்ந்தும் வளர்த்து, பொருளாதார வளர்ச்சி நிலையை மேம்படுத்த இலங்கை பாடுபடும்.
இந்த முயற்சி மூலம் எதிர்காலத்தில் இலங்கையானது இந்தியப் பொருங்கடல் பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக மாறும் என்று எதிர்பார்க்கின்றோம்.
சீனாவும் இலங்கையும் கை கோர்த்து, கொவிட்-19 தொற்று நோய் தடுப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும் என்றும் சீன - இலங்கை நட்புறவு மீது எதிர்பார்ப்பு கொண்டவர்கள் அனைவரும் நம்பிக்கை கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM