ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாவினை சிறப்பு உதவித் தொகையாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த மாதத்திலிருந்து 5 ஆயிரம் ரூபா வீதம் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

இதேவ‍ேளை அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.