நுரையீரலை சுற்றி பாதுகாப்பு கவசமாக ஃப்ளூரா என்ற உறை அமைந்துள்ளது. இந்த ஃப்ளூரா விசரல் மற்றும் பரைட்டல் என்ற இரண்டு வகை ஃப்ளூராக்கள் இருக்கும். இரண்டிற்கும் இடையே ஒரு திரவம் சுரக்கும். இதனையே ஃப்ளுரல் திரவம் என சொல்வோம். இந்த திரவம் 5 மில்லி என்ற அளவிற்கு குறைவாகவே இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரித்தால், அதனைத் தான் ப்ளூரல் எஃப்யூஷன் என குறிப்பிடுகிறார்கள்.

சிறுநீரக பாதிப்பு, இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, நுரையீரலில் காச நோய்த்தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், நுரையீரலில் உள்ள ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும்.

காய்ச்சல், மூச்சுத்திணறல், கடுமையான இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் இதன் பாதிப்பை உறுதிப்படுத்துவார்கள். இத்தகைய  பாதிப்பிற்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், மூச்சுத் திணறல், இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

பாதிப்பின் தன்மையை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பிறகு, அவர்களுக்கு நீர் தெரபி மற்றும் மருந்து தெரபி மூலம் முழுமையான நிவாரணம் வழங்குவர். வேறு சிலருக்கு ஃப்ளூரல் டாப்பிங் ( Pleural Tapping) என்ற சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்குவார்கள்.

டொக்டர் தீபா செல்வி

தொகுப்பு அனுஷா.