மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்களா என்பது சந்தேகத்திற்குரியது -  திஸ்ஸ விதாரண

Published By: T Yuwaraj

03 Jan, 2022 | 08:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர குறைவடையவில்லை.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்களா என்பது பெரிதும் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவது முற்றிலும் தவறானது - திஸ்ஸ விதாரன  | Virakesari.lk

சமகால அரசியல் மற்றும் சமூக நிலைமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.சமையல் எரிவாயு சிலிண்டர் வரிசை,பால்மா வரிசை,மண்ணெண்ணெய் வரிசை என மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக நடுத்தர மக்கள் ஒருவேளை உணவை பெற்றுக் கொள்வதில் கூட சிரமரங்களை எதிர்க்கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உற்பத்தி கூட்டுறவு, நுகர்வோர் கூட்டுறவு முறைமை ஊடாக நிவாரணம் வழங்கும் நடடிவக்கையினை முன்னெடுக்குமாறு  நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிரம் பல முறை கோரிக்கை விடுத்தேன்.

அவசரமற்ற அபிவிருத்தி பணிகளை சற்று தாமதப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பிரதமரிடம் இரண்டு முறை கோரிக்கை விடுத்தேன்.பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் மதிப்பளிக்கப்படவில்லை.

பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்கள் 2019ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்து நாளுக்கு நாள்; வெறுப்பு தீவிரமடைந்துள்ளன.மக்கள் பிரநிதிகள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் வெகுவிரைவில் வீதிக்கிறங்குவார்கள்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் பொது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்களா என்பது பெரிதும் சந்தேகத்திற்குரியது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற...

2023-03-31 17:33:17
news-image

கடும் வெப்பமான காலநிலை : அதிகம்...

2023-03-31 16:50:00
news-image

நியூஸிலாந்துடனான தொடரில் தோல்வி அடைந்த இலங்கை...

2023-03-31 18:22:56
news-image

திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து...

2023-03-31 18:23:10
news-image

மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

2023-03-31 16:52:44
news-image

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க...

2023-03-31 16:42:54
news-image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை...

2023-03-31 16:29:30
news-image

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு...

2023-03-31 16:15:25
news-image

மாணவர் பஸ் சேவை,முச்சக்கர வண்டி கட்டணம்...

2023-03-31 16:09:31
news-image

டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின்...

2023-03-31 16:56:00
news-image

நீர்கொழும்பு, கட்டானை பகுதியில் ஆடை தொழிற்சாலையின்...

2023-03-31 16:33:45
news-image

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப...

2023-03-31 14:45:33