சீனாவில் உய்குர்கள் உருக்குலைப்பு

Published By: Digital Desk 2

03 Jan, 2022 | 08:41 PM
image

லோகன் பரமசாமி

மக்கள் சீன குடியரசின்ஷின்ஜியாங் வட,கிழக்கு பிராந்தியத்தில் பல நெடும் காலமாக போராடி வரும் இஸ்லாமிய மதத்தினைதழுவிய இனக்குழுமமான உய்குர்கள் மேலை நாடுகளின் முக்கிய கவனத்தை பெற்றுள்ளனர். இதற்குகாரணம் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம் மிக முக்கியமான தரைவழிப் பூகோள  மையமாக காணப்படுவதாகும்.

உய்குர் தன்னாட்சிப்பிரதேசம் சீனாவையும் இதர தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய பிராந்திய நாடுகளையும் இணைக்கும்முக்கிய பிரதேசமாகக் காணப்படுகிறது. 

தெற்கே இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளையும்கிழக்கே ஆப்கனிஸ்தான் தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கசகஸ்தான், மொங்கோலியா ரஷ்யா ஆகியநாடுகளையும் சீனத் தலைநகரான பீஜிங்குடன் இணைப்பதற்கான மையப்புள்ளியாக காணப்படுகின்றது.

மேலும் சீனா தனதுகட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், அக்சாய் ஷின் என்றுசீனாவினால் அழைக்க கூடிய ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆகியனவற்றினையும் இணைக்கும் ஒருபிராந்தியமாக உய்குர்கள் வாழும் தன்னாட்சிப் பிரதேசம் உள்ளது. இதனால் இந்தப் பிரதேசம்சீனாவுக்கு முக்கியமானதொரு தாங்கு தளமாகக் கருதப்படுகிறது.

இவை எல்லாவற்றிற்கும்மேலாக நிலத்தடி எரிவாயு, மசகு எண்ணெய் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளதோடு பெருவாரியானகனிமவளங்களையும்  மட்டுமல்லாது சீனாவின் அணுப்பரிசோதனைக் களமாகவும் இப்பிரதேசம் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது.  

இந்தப் பிராந்தியத்தில் குறிப்பிட்ட இடங்களில்  செறிவாக வாழும் உய்குர் மக்களும் அவர்களது இஸ்லாமிய மதமும் அவர்களது பண்பாடுகளும் சிந்தனைஓட்டமும் தனித்துவமான அரசியல் செயற்பாடுகளும் சீனாவில் பெரும்பான்மையாகவுள்ள ஹான் இனத்திலிருந்துவேறுபட்டதாக உள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-02#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்