பெருந்தொற்றுடன்சகவாழ்வு : 2022 இன் சவால்கள்

By Digital Desk 2

03 Jan, 2022 | 08:40 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை  

2019இல் கொரோனா வைரஸ் உலகைத் தாக்கியபோது,அது மக்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றியது.2020இல் முடக்கநிலைகளும், இன்னோரன்ன கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. விஞ்ஞானிகள் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க பாடாய்ப்பட்டார்கள்.

2021 இல் Sars-Cov-2 மென்மேலும் பிறழ்வுஅடைந்தது. இது இரண்டாவது அலையைஉருவாக்கி, கோடிக்கணக்கான மக்களைப் பாதித்தது. இலட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஆகக்கூடுதலாகப் பாதிக்கப்பட்டன. முன்னையதில் உலகிலேயே ஆகக்கூடுதலான கொரோனா மரணங்கள் பதிவாகின.பின்னையதில், ஒவ்வொரு நாளும் ஆகக்கூடுதலானவர்களுக்குதொற்று உறுதியானது.

தற்போதுஒமிக்ரோன் பிறழ்வு காரணமாக அதிகதொற்றுக்கள் நிகழ்கின்றன. இந்தப் பிறழ்வு ஆரம்பத்தில்தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்டது. தற்போது நூறுக்கும் மேற்பட்டநாடுகளில் பரவியிருக்கிறது. மீண்டும் முடக்கநிலைகள் வருமா, கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமாஎன்று மக்கள் அஞ்சுகிறார்கள்.

2022ஆம்ஆண்டின் இரண்டாவது நாளில் இருக்கிறோம். இந்தவருடமும் கொரானாவுடன் சகவாழ்வு தானா என்ற கேள்விநீடிக்கின்றது. அரசுகள் என்ன செய்யப்போகின்றன, உலகம் தாக்குப்பிடிக்குமா என்றெல்லாமும்கேள்விகள் எழுகின்றன.

கொரோனாவைரஸ் அல்பா, பீற்றா, காமா, டெல்டா என்றெல்லாம் எத்தனையோ அவதாரங்களை எடுத்திருக்கிறது. ஒமிக்ரோன் கடைசி கலியுக அவதாரமாஎன்று கேட்டால், இல்லை என்கிறார்கள், விஞ்ஞானிகள்.இன்னும் பல அவதாரங்கள் உண்டென்பதால்,தடுப்பூசிக் கேடயங்களை ஏந்துங்கள் என்று அரசுகளை வலியுறுத்துகிறார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-02#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right