கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியில் அமைந்துள்ள பாவனைக்கு உட்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய கிடங்கொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பின்னர் தீ வேகமாக அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.
இதனையடுத்து மீட்புப் பணியாளர்களும் தீ அணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கடமையில் இருந்தன. மேலும் தீயை அணைக்க கூடுதல் தீயணைப்புப் பிரிவுகள் வரவழைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில் அனர்த்தத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.