(ஏ.என்.ஐ)

சீனா முதலீடுகள் மற்றும் திட்டங்களினால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் பிரச்சினைக்கு கூட தீர்வு வழங்கப்பட வில்லை என பாக்கிஸ்தான் - குவாடர் பகுதிகள் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குவாடர் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கம் இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றது. 

அதேபோன்று, இந்த இயக்கம் முன்னெடுத்து வரும் போரட்டங்களின் வெற்றியானது இம்ரான் கான் அரசாங்கத்தின் பாதிப்பை வெளிப்படுத்துவதாக தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய மன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளில் உதாசீனம் செய்தல் ,  முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் இந்த சோதனைச் சாவடிகளில் அதிகமானவை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டமாக காணப்படுகின்றமை என்பன மக்கள் வெறுப்பிற்கு காரணமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குவாடர் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கத்தின் தலைவர் மௌலானா ஹிதாயத்தின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 

குறிப்பாக சட்டவிரோத இழுவை படகுகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அண்டை பகுதிகளான சிந்து மற்றும் பிற நாடுகளிலிருந்தும் கூட விசைப்படகுகள் இந்த கடற்பகுதியில் மீன்பிடிக்க வருவதால் உள்ளூர் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறனர். 

மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று இழுவை படகுகள் மூலம் சட்டவிரோத மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்திருந்தார்.

இந்த பிரச்சினையானது சட்டவிரோத இழுவை படகுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக சீன இழுவை படகுகளும் பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன்பிடிக்கின்றனர். இந்நிலையானது உள்ளுர் மீனவர்களை வெகுவாக பாதிப்பதாக தெரிவிக்கின்றனர்.