தமிழ் மக்களின் மனங்களில் இருப்பதை கூறுவதே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கம் ; சி.வி.

Published By: Priyatharshan

03 Oct, 2016 | 04:16 PM
image

(ரி.விரூஷன்)

தமிழ் மக்கள் பேரவையானது எதிர்கட்சி என கூறப்படுகின்றதே தவிர அது எதிர்க்கட்சி இல்லை எனவும் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள தேவைகள், அபிலாஷைகள் மற்றும் விருப்பங்களை எடுத்து கூறுவதற்காகவே என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுவிற்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் கடந்த ஆட்சியில் காணப்பட்ட  நிலைமைகள் இந்த ஆட்சியிலும் தொடருமானால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் எனவும் சுவிற்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கு குறிப்பிட்டிருந்தார்.

இன்று நண்பகல் சுவிற்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இக் கலந்துரையாடலிலேயே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் அது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். 

அதாவது தமிழ் மக்கள் பேரவையானது எதிர்க்கட்சியாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அது எதிர்க்கட்சி அல்ல. இது தமிழ் மக்களின் தேவைகள், விருப்பங்கள்  மற்றும் அபிலாஷைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட சிவில் அமைப்பாகும்.

ஏனெனில் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை. அவர்கள் தமது தேவைகள், விருப்பங்கள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு இராணுவத்தினாலும் ஆயுதக்குழுக்களாலும் தமிழ் மக்களின் வாய்கள் மூடப்பட்டிருந்தன. 

இது அரசியல் நகர்வில் முக்கியமான ஓர் விடயம் ஏனெனில் தமிழ் மக்களது மனங்களில் உள்ளவற்றை எடுத்துக்கூற வேண்டிய அவசியமுள்ளது.

மேலும் நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஆட்சியானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய ஆதரவுடனேயே ஏற்படுத்தப்பட்டது. 

ஆனாலும் இன்னமும் தமிழ் மக்களது பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், காணாமல் போனவர்கள் விடயம் இவை தீர்க்கப்பட வேண்டும். 

பயங்கரவாத தடைச்சட்டமானது நீக்கப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாகவே நாட்டில் மக்களிடையே நல்லாட்சியினை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் கடந்த ஆட்சிக் காலங்களில் காணப்பட்ட நிலைமையே இனியும் தொடருமானால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் என்ற விடயத்தையும் முதலமைச்சர் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டு அமைச்சருக்கு எடுத்துரைத்ததுடன், மத்திய அரசானது மாகாண அரசை மதித்து அவர்களோடு பேசி பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயல வேண்டும் எனவும் நாம் கோருகின்ற சமஷ்டியானது நாட்டினை பிரிப்பதற்கான ஒன்றல்ல என்பதை அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டு அமைச்சருக்கு வலியுறுத்தியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04