அதர்வா மின்னும் 'நிறங்கள் மூன்று' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 4

03 Jan, 2022 | 12:05 PM
image

நடிகர்கள் அதர்வா, சரத்குமார், ரகுமான் மூவரும் ஒன்றிணையும் புதிய படத்திற்கு 'நிறங்கள் மூன்று' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கருணாமூர்த்தி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'நிறங்கள் மூன்று'.  இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர்கள் அதர்வா, சரத்குமார், ரகுமான் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். 

இவர்களுடன் நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயபிரகாசின் வாரிசான நடிகர் துஷ்யந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சின்னி ஜெயந்த், ஜோன் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இம்மாதம் 5ஆம் திகதி முதல் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் வெள்ளை, கருப்பு மற்றும் இருண்ட பக்கங்களை மையப்படுத்தி 'நிறங்கள் மூன்று' என்ற தலைப்பில் திரைக்கதை உருவாகி இருக்கிறது. ஹைப்பர் லிங்க் தொடர்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இதன் திரைக்கதை, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும். சென்னையை கதைக்களமாக கொண்டு இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.'' என்றார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் அதர்வா முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதாலும், அதர்வா ரகுமான் சரத்குமார் மூவர் முதன்முறையாக இணைந்து இருப்பதாலும் இதற்கு எதிர்பார்த்ததைவிட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right