விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' டைட்டில் லுக் வெளியீடு

By T Yuwaraj

03 Jan, 2022 | 11:25 AM
image

நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியாகி இருக்கிறது.

'திரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் புதிய படம் 'மார்க் ஆண்டனி'. இதில் விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் 'மாநாடு' புகழ் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். 'எனிமி: படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் வினோத்குமார் மினி ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் 'மார்க் ஆண்டனி: படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். 

இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் தயாராகி ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 3ஆம் திகதி முதல் சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' மாநாடு படம் வெளியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே நடிகர் எஸ். ஜே. சூர்யாவை சந்தித்து சென்னையை கதைக்களமாக கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவர் முதலில் வில்லனாக நடிக்க தயங்கினார். 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் கதையை கேட்ட அவர், இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப்படம் சென்னையை கதைக்களமாக கொண்டிருந்தாலும் இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் எட்டு சண்டை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.'' என்றார்.

'மாநாடு' படத்திற்கு பிறகு ரசிகர்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் எஸ் ஜே சூர்யா,  'மார்க் ஆண்டனி' படத்தில் விஷாலுடன் முதன்முதலாக மோதவிருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right